Sunday, December 29, 2019


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளில் துஷ்ட சமண, புத்தர் நிக்ரக பதிகங்கள்



தலம் : சீர்காழி - 01-பிரமபுரம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

புத்தரோடுபொறி யில்சமணும்புறங்
        கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென
        துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர்
        மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய
        பெம்மானிவ னன்றே.  10


தலம் : புகலூர் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை  

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்
        செப்பிற் பொருளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்
        கடவுள் ளிடம்போலும்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு
        தூவித் துதிசெய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்
        வானகமெய்தும் புகலூரே.  10


  தலம் : வலிதாயம்  நாடு : தொண்டைநாடு



ஆசியாரமொழி யாரமண்
        சாக்கியரல் லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர்
        சொல்லைப் பொருளென்னேல்
வாசிதீர அடியார்க்கருள்செய்து
        வளர்ந்தான் வலிதாயம்
பேசும்ஆர்வ முடையாரடி
        யாரெனப்பேணும் பெரியோரே.  10

  தலம் : சீர்காழி - 03-புகலி நாடு : சோழநாடு காவிரி வடகரை



பத்தர் கணம்பணிந் தேத்தவாய்த்த
        பான்மைய தன்றியும் பல்சமணும்  
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்  
        புகலி நிலாவிய புண்ணியனே  
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற  
        எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்  
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை  
        விண்ணிழி கோயில் விரும்பியதே.  10


  தலம் : கீழைத்திருக்காட்டுப்பள்ளி  நாடு : சோழநாடு காவிரி வடகரை





ஒண்டுவ ரார்துகி லாடை மெய்போர்த்
        துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார்
        கூறுவ தாங்குணம் அல்லகண்டீர்
அண்ட மறையவன் மாலுங்காணா
        ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை
        வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.  10




தலம் : மருகல்  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



இலைமரு தேயழ காகநாளு  
          மிடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்  
    நிலையமண் தேரரை நீங்கிநின்று2  
          நீதரல் லார்தொழு மாமருகல்  
    மலைமகள் தோள்புணர் வாயருளாய்  
          மாசில்செங் காட்டங் குடியதனுள்  
    கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்  
          கணபதி யீச்சரங் காமுறவே.

பாடம் : 2நீங்கிநின்ற,நீங்கநின்ற  10




தலம் : நள்ளாறு

 நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



  தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
        சாதியில் நீங்கிய வத்தவத்தர்  
நடுக்குற நின்றநள் ளாறுடைய
        நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்  
எடுக்கும் விழவும்நன் னாள்விழவும்  
        இரும்பலி யின்பினோ3 டெத்திசையும்  
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்  
        ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

பாடம் : 3பலியன்பினோ  10




  தலம் : ஆவூர்ப்பசுபதீச்சரம்  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
        பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
        சைவ ரிடந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமுஞ்
        சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
        பசுபதி யீச்சரம் பாடுநாவே.  10


தலம் : சீர்காழி - 02-வேணுபுரம் நாடு : சோழநாடு காவிரி வடகரை





மாசேறிய வுடலாரமண்
        குழுக்களொடு தேரர்
தேசேறிய பாதம்வணங்
        காமைத்தெரி யானூர்
தூசேறிய அல்குல்துடி
        இடையார்துணை முலையார்
வீசேறிய புருவத்தவர்
        வேணுபுரம் அதுவே.  10


    தலம் : அண்ணாமலை நாடு : நடுநாடு



 வேர்வந்துற மாசூர்தர
        வெயில்நின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர
        மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின்
        அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல்ல
        கழல்சேர்வது குணமே.  10
தலம் : வீழிமிழலை  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

மசங்கற்சமண் மண்டைக்கையர்
        குண்டக்குண மிலிகள்
இசங்கும்பிறப் பறுத்தானிட
        மிருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள்
        ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொ
        ழில்வீழிம் மிழலையே.  10




தலம் : முதுகுன்றம்  நாடு : நடுநாடு



  அருகரொடு புத்தரவ
        ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி
        யுடையானிடம் மலரார்
கருகுகுழல் மடவார்கடி
        குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர்
        முதுகுன்றடை வோமே.  10


 தலம் : வியலூர்  நாடு : சோழநாடு காவிரி வடகரை



தடுக்கால்உடல் மறைப்பாரவர்
        தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு
        பேணார்நமர் பெரியோர்
கடற்சேர்தரு விடமுண்டமு
        தமரர்க்கருள் செய்த
விடைச்சேர்தரு கொடியானிடம்
        விரிநீர்விய லூரே.  10



  தலம் : கொடுங்குன்றம் நாடு : பாண்டியநாடு

மத்தக்களி றாளிவ்வர
        வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை
        வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச்
        சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன்
        மேயபழ நகரே.  10



  தலம் : நெய்த்தானம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

மத்தம்மலி சித்தத்திறை
        மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி
        பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை
        நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல்
        செறுநோயடை யாவே.  10



  தலம் : புள்ளமங்கை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

நீதியறி யாதாரமண்
        கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை
        கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு
        ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு
        தன்மைபெற லாமே.  10



  தலம் : இடும்பாவனம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

தடுக்கையுடன் இடுக்கித்தலை
        பறித்துச்சமண் நடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள்
        உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல்
        மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம்
        இடும்பாவன மிதுவே.  10

  தலம் : நின்றியூர் நாடு : சோழநாடு காவிரி வடகரை


நெறியில்வரு பேராவகை
        நினையாநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை
        கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை
        யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி
        வாழ்த்தும்மது வாழ்த்தே.  10



  தலம் : சீர்காழி - 12-கழுமலம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

அமைவன துவரிழு கியதுகி
        லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை
        சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம
        ரிறைவன தடிபர வுவர் தமை
நமையல வினைநல னடைதலி
        லுயர்நெறி நனிநணு குவர்களே.  10



  தலம் : வீழிமிழலை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

இகழுரு வொடுபறி தலைகொடு
  மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
  கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன
  லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர்2 கொடையினர்
  செறிவொடு திகழ்திரு மிழலையே.






  தலம் : சிவபுரம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

குணமறி வுகள்நிலை யிலபொரு
  ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி
  மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர
  னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை
  பவரெழி லுருவுடை யவர்களே.  10


திருமறைக்காடு

இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு  
    செயல்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம்  
    முயல்பவர் துவர்படம் உடல்பொதி பவரறி வருபரன் அவனணி  
    வயலினில் வளைவளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.    1.22.10





  தலம் : கோலக்கா நாடு : சோழநாடு காவிரி வடகரை



பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.  10

  தலம் : சீர்காழி - 10-காழி நாடு : சோழநாடு காவிரி வடகரை

பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே.  10






  தலம் : செம்பொன்பள்ளி  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே.  10


தலம் : புத்தூர்  நாடு : பாண்டியநாடு

கூறைபோர்க்குந் தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
ஏறுகொண்ட கொடியெம் இறையாரே.  10


  தலம் : புன்கூர்  நாடு : சோழநாடு காவிரி வடகரை



குண்டு முற்றிக் கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.  10


  தலம் : சோற்றுத்துறை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.  10


தலம் : நறையூர்ச்சித்தீச்சரம்  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.  10


   தலம் : சீர்காழி - 03-புகலி நாடு : சோழநாடு காவிரி வடகரை

உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன்நகர் நன்மலி பூகம்
புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே.  10


  தலம் : குரங்கணில்முட்டம் நாடு : தொண்டைநாடு


கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்
வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
குழுமின்சடை யண்ணல் குரங்கணில் முட்டத்
தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.  10


தலம் : இடைமருதூர்  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.  10



  தலம் : அன்பிலாலந்துறை நாடு : சோழநாடு காவிரி வடகரை

தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
வெறியார்மலர் கொண்டடி வீழும் அவரை
அறிவாரவர் அன்பிலா லந்துறை யாரே.  10



  தலம் : சீர்காழி - 10-காழி நாடு : சோழநாடு காவிரி வடகரை

சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோ டுடன்அன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.  10


 தலம் : வீழிமிழலை  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே.  10




  தலம் : ஐயாறு  நாடு : சோழநாடு காவிரி வடகரை



துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணைஅந் தணையாறே.  10



  தலம் : பனையூர் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

அழிவல் அமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே.  10


  தலம் : மயிலாடுதுறை  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே.  10


தலம் : வேட்களம்  நாடு : சோழநாடு காவிரி வடகரை



  அத்தமண் தோய்துவ ரார்அமண் குண்டர்
  யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவ தல்லாற்
  புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
  மூரிவல் லானையின் ஈருரிபோர்த்த
வித்தகர் வேத முதல்வர்
  வேட்கள நன்னக ராரே.  10



  தலம் : வாழ்கொளிபுத்தூர் நாடு : சோழநாடு காவிரி வடகரை



குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யிற்
  கொள்கையி னார்புறங் கூற
வெண்டலை யிற்பலி கொண்டல்
  விரும்பினை யென்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத்
  தோன்றிநின் றானடி சேர்வோம்.  10



  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை  தலம் : பாம்புரம்

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
  குற்றுவிட்டுடுக் கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
  கையர்தா முள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
  வாரண முரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
  பாம்புர நன்னக ராரே.  10


  தலம் : பேணுபெருந்துறை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

குண்டுந் தேருங் கூறை களைந்துங்
  கூப்பி லர்செப் பிலராகி
மிண்டும் மிண்டர் மிண்ட வைகண்டு
  மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
  தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
  மல்கு பெருந்துறை யாரே.  10




  தலம் : கற்குடி நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

மூத்துவ ராடையி னாரும்
  மூசு கருப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம் மொழியார்கள்
  நயமில் அராமதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர்
  இறைஞ்ச அவரிட ரெல்லாம்
காத்தவர் காமரு சோலைக்
  கற்குடி மாமலை யாரே.  10



  தலம் : பாச்சிலாச்சிராமம்   நாடு : சோழநாடு காவிரி வடகரை

நாணொடு கூடிய சாயின ரேனும்
  நகுவ ரவரிரு போதும்
ஊணொடு கூடிய வுட்கு நகையார்
  உரைக ளவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
  லாச்சிரா மத்துறை கின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
  புனைசெய்வ தோஇவர் பொற்பே.  10




  தலம் : ஆலங்காடு நாடு : தொண்டைநாடு

போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப் பாருங் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  11




தலம் : அதிகை வீரட்டானம்  நாடு : நடுநாடு

அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடன்ஏந்தி யுடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.  10



  தலம் : சீர்காழி - 07-சிரபுரம்    நாடு : சோழநாடு காவிரி வடகரை

புத்தரோடு சமணர்சொற்கள்
  புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த
  பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து
  மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச்
  சிரபுரம் மேயவனே.  10


  தலம் : சேய்ஞலூர் நாடு : சோழநாடு காவிரி வடகரை

மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த வூணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகம ழும்பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.  10




 தலம் : நள்ளாறு நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



மாசுமெய்யர் மண்டைத்தேரர்
  குண்டர் குணம்இலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி
  யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி
  மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான்
  மேயது நள்ளாறே.  10


  தலம் : வலிவலம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

பொதியிலானே பூவணத்தாய்
  பொன்திகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம்
  பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர்
  சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ
  வலிவல மேயவனே.  10




  தலம் : சோபுரம் நாடு : நடுநாடு

புத்தரோடு புன்சமணர்
  பொய்யுரையே யுரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த
  பெற்றிமையென் னைகொலாம்
மத்தயானை யீருரிவை
  போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே
  சோபுரமே யவனே.  10



  தலம் : நெடுங்களம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற
  வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந்
  தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால்
  தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய்
  நெடுங்களம்மே யவனே.  10


  தலம் : முதுகுன்றம் நாடு : நடுநாடு

உறிகொள்கையர் சீவரத்தர்
  உண்டுழல்மிண்டர் சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே
  நித்தலுங்கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப்
  பொங்குவிடத் தையுண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன்
  மேயதுமு துகுன்றே.  10


திருஓத்தூர்

கார மண்கலிங் கத்துவ ராடையர்  
    தேரர் சொல்லவை தேறன்மின்  
    ஓரம் பால்எயில் எய்தவ னோத்தூர்ச்  
    சீர வன்கழல் சேர்மினே.    1.54.10


தலம் : மாற்பேறு நாடு : தொண்டைநாடு

தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்3
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே.




  தலம் : வேற்காடு நாடு : தொண்டைநாடு

மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாஎழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.  10



  தலம் : கரவீர  நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

செடிஅ மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்2
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே.

பாடம் : 2கொள்ளன்மின்  10


  தலம் : சீர்காழி - 05-தோணிபுரம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறையாரும் மடக்கிளியே
  இங்கேவாதே னொடுபால்
முறையாலே உணத்தருவன்
  மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடல்றோணி
  புரத்தீசன் துளங்கும்இளம்
பிறையாளன் திருநாமம்
  எனக்கொருகாற் பேசாயே.  10



  தலம் : செங்காட்டங்குடி நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

செடிநுகருஞ் சமணர்களுஞ்
  சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க்
  கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்
  கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
  கணபதீச் சரத்தானே.  10




  தலம் : கோளிலி நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

தடுக்கமருஞ் சமணரொடு
  தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரும் மொழிகேளா
  தீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகந்
  நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங்
  கோளிலியெம் பெருமானே.  10




  தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து நாடு : சோழநாடு காவிரி வடகரை

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந்
  தூய்மையிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணம்
  காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா
  யால்நலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச்
  சண்பையமர்ந்தவனே.  9




  தலம் : பூவணம் நாடு : பாண்டியநாடு

அலையார்புனலை நீத்தவருந்
  தேரரும் அன்புசெய்யா
நிலையாவண்ணம் மாயம்வைத்த
  நின்மலன் தன்னிடமாம்
மலைபோல்துன்னி வென்றியோங்கும்
  மாளிகை சூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந்
  தென்திருப் பூவணமே.  10




  நாடு : சோழநாடு காவிரி வடகரை   தலம் : பல்லவனீச்சுரம்

உண்டுடுக்கை யின்றியேநின்
  றூர்நக வேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார்
  கண்டறி யாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை
  சார நடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும்
  பல்லவ னீச்சரமே.  10


தலம் : சீர்காழி - 09-சண்பை  நாடு : சோழநாடு காவிரி வடகரை



  போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலன் இருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே.  10




  தலம் : பழனம்   நாடு : சோழநாடு காவிரி வடகரை

கண்டான் கழுவா முன்னேயோடிக்
  கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல்
  லோரார் பாராட்ட
வண்டாமரையின் மலர்மேல்நறவ
  மதுவாய் மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும்
   பழன நகராரே.  10



  தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை) நாடு : வடநாடு

விருதுபகரும் வெஞ்சொற்சமணர்
  வஞ்சச் சாக்கியர்
பொருதுபகரும் மொழியைக் கொள்ளார்
  புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்
  தம்பால்இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ணம் உடையார் போலுங்
  கயிலை மலையாரே.  10



  தலம் : அண்ணாமலை நாடு : நடுநாடு

தட்டையி டுக்கித் தலையைப்பறித்துச்
  சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ளவேண்டா
  பேணித் தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்
  பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்
  தணையும் அண்ணாமலையாரே.  10




  தலம் : நறையூர்ச்சித்தீச்சரம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

நின்றுண் சமணர் இருந்துண்
  தேரர் நீண்ட போர்வையார்
ஒன்று முணரா ஊமர்
  வாயில் உரைகேட் டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ண முலையில்
  கபால மயல்பொழியச்2
சென்றுண் டார்ந்து சேரும்
  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பாடம் : 2வழியச்  10


  தலம் : ஈங்கோய்மலை நாடு : சோழநாடு காவிரி வடகரை

பிண்டியேன்று பெயராநிற்கும்
  பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியும்
  மதியில் தேரரும்
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா
  துமையோ டுடனாகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான்
  ஈங்கோய் மலையாரே.  10




  தலம் : குடந்தைக்காரோணம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

நாணார் அமணர் நல்ல
  தறியார் நாளுங் குரத்திகள்
பேணார் தூய்மை1 மாசு
  கழியார் பேச லவரோடும்
சேணார் மதிதோய் மாட
  மல்கு செல்வ நெடுவீதிக்
கோணா கரமொன் றுடையார்
  குடந்தைக் காரோ ணத்தாரே.

பாடம் : 1தாமெய்  10



 தலம் : கானூர் நாடு : சோழநாடு காவிரி வடகரை

ஆமையரவோ டேனவெண்கொம்
  பக்கு மாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல
  உள்வெந் நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங்
  கோணாகணையானும்
சேமமாய செல்வர்கானூர்
  மேய சேடரே.  10


  தலம் : சீர்காழி - 08-புறவம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

ஆலும் மயிலின் பீலி
  யமணர் அறிவில் சிறுதேரர்
கோலும் மொழிகள் ஒழியக்
  குழுவுந் தழலும் எழில்வானும்
போலும் வடிவும் உடையான்
  கடல்சூழ் புறவம் பதியாக
ஏலும் வகையால் இமையோ
  ரேத்த உமையோ டிருந்தானே.  10



  தலம் : சீர்காழி - 04-வெங்குரு நாடு : சோழநாடு காவிரி வடகரை


பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
  பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடுடை மலராள் பொருட்டுவன் தக்கன்
  எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
  கண்டவர் வெருவுற விளித்துவெய் தாய
வேடுடைக் கோலம் விரும்பியவிகிர் தர்
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  10



  தலம் : இலம்பையங்கோட்டூர் நாடு : தொண்டைநாடு

உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
  உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வன் எனதுரை தனதுரை யாகப்
  பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சினை முல்லைநன் பொன்னடை வேங்கை
  களிமுக வண்டொடு தேன்இனம் முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  10



  தலம் : அச்சிறுபாக்கம் நாடு : தொண்டைநாடு

வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
உள்கலா காததோ ரியல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  10



  தலம் : இடைச்சுரம் நாடு : தொண்டைநாடு

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமைய ரடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயல்இள வாளைகள்இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  10






  தலம் : சீர்காழி - 12-கழுமலம்  நாடு : சோழநாடு காவிரி வடகரை

 ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  10


  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)  நாடு : சோழநாடு காவிரி வடகரை



பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.  10




   தலம் : பாற்றுறை நாடு : சோழநாடு காவிரி வடகரை

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே.  10


  தலம் : சீர்காழி - 10-காழி நாடு : சோழநாடு காவிரி வடகரை

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.  10




  தலம் : வீழிமிழலை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.  10



  தலம் : அம்பர் மாகாளம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட் கில்லையிடர் தானே.  10



  தலம் : நாகைக்காரோணம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  10



 நாடு : சோழநாடு காவிரித் தென்கரை  தலம் : நல்லம்

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே.  10


  தலம் : நல்லூர் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட் கில்லை இடர்தானே.  10



  தலம் : ஆப்பனூர் நாடு : பாண்டியநாடு

செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.  10



  தலம் : எருக்கத்தம்புலியூர் நாடு : நடுநாடு

புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன்தன் அடியே அடைவோமே.  10




  தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து நாடு : சோழநாடு காவிரி வடகரை

தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.  11




  தலம் : ஆரூர் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

கடுக்கொள் சீவரை, அடக்கி னான்ஆரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.  10




   தலம் : வீழிமிழலை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.  10


  தலம் : முதுகுன்றம்   நாடு : நடுநாடு

தேரர் அமணரும், சேரும் வகையில்லான்1
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.

பாடம் : 1வகையில்லா  10


  தலம் : ஆலவாய் (மதுரை) நாடு : பாண்டியநாடு

அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவம் ஓங்குமே.  9




ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே.  10




  தலம் : இடைமருதூர் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.  10




  தலம் : அன்னியூர் நாடு : சோழநாடு காவிரி வடகரை

குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.  10




  தலம் : சீர்காழி - 08-புறவம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

வையகம் நீர்தீ வாயுவும் விண்ணும் முதலானான்
மெய்யல தேரர் உண்டிலை யென்றே நின்றேதம்
கையினி லுண்போர் காண வொணாதான் நகரென்பர்
பொய்யக மில்லாப் பூசுரர் வாழும் புறவம்மே.  10




  தலம் : சிராப்பள்ளி நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.  10




  தலம் : குற்றாலம்  நாடு : பாண்டியநாடு

பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருந்தம் மேறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்
இருந்துண் தேரும் நின்றுண் சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்.  10




  தலம் : பரங்குன்றம் நாடு : பாண்டியநாடு

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.  10




  தலம் : கண்ணார்கோயில் நாடு : சோழநாடு காவிரி வடகரை

தாறிடு பெண்ணைத் தட்டுடை
  யாருந் தாம்உண்ணும்
சோறுடை யார்சொல் தேறன்மின்
  வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடை யன்பரன் என்பணி
  வான்நீள் சடைமேலோர்
ஆறுடை யண்ணல்
  சேர்வதுகண்ணார் கோயிலே.  10


  தலம் : சீர்காழி - 03-புகலி நாடு : சோழநாடு காவிரி வடகரை

வெந்துவர் மேனியினார் விரிகோ
  வணம்நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம்
  அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான்
  உறைகோயில் வாய்ந்த
புந்தியி னார்பயிலும்
  புகலிப் பதிதானே.  10






  தலம் : ஆரூர்   நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

செந்துவர் ஆடையினார் உடைவிட்டு
  நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந்
  தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலு மரணம்
  எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான்
  அவனெந் தலைமையனே.  10




  தலம் : ஊறல் நாடு : தொண்டைநாடு

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர்
  மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா
  ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில்
  சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான்
  திருவூறலை உள்குதுமே.  9




  தலம் : கொடிமாடச்செங்குன்றூர் நாடு : கொங்குநாடு

போதியர் பிண்டியரென் றிவர்கள்
  புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட்
  டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச்
  செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும்
  வினையான வீடுமே.  10



  தலம் : பாதாளேச்சுரம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

காலையில் உண்பவருஞ் சமண்கையருங்
  கட்டுரைவிட் டன்று
ஆலவிடம் நுகர்ந்தான்
  அவன்றன் அடியேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்
  டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான்
  உறைகோயில் பாதாளே.  10


  தலம் : சீர்காழி - 07-சிரபுரம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.  10




  தலம் : இடைமருதூர் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.

(*) ஓத்து என்பது வேதம்.  10




  தலம் : கடைமுடி நாடு : சோழநாடு காவிரி வடகரை

மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.  10



  தலம் : சிவபுரம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே.  10




  தலம் : வல்லம்  நாடு : தொண்டைநாடு

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
சென்றவன் உறைவிடந் திருவல்லமே.  10




  தலம் : மாற்பேறு நாடு : தொண்டைநாடு

குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
களித்துநன் கழலடி காணலுற்றார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.  10


  தலம் : இராமனதீச்சரம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரால் நாமம் அறிந்துரைமின்
மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சரமே.  10


தலம் : பொது  நாடு : பொது



 சாக்கியப் பட்டுஞ் சமணுரு
  வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப்
  போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை
  யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ
  றாதிரு நீலகண்டம்.  10




  தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து நாடு : சோழநாடு காவிரி வடகரை

கையது வெண்குழை காதது
  சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை யடியவர்
  எய்தாரோர் ஏனக்கொம்பு  
மெய்திகழ் கோவணம்பூண்ப
  துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுள்
  மேவிய கொற்றவரே.  11








  தலம் : பருப்பதம் நாடு : வடநாடு

சடங்கொண்ட சாத்திரத்தார்
  சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய்
  மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்
  போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான்
  பருப்பதம் பரவுதுமே.  10



  தலம் : கள்ளில் நாடு : தொண்டைநாடு

ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.  10


  தலம் : ஐயாறு நாடு : சோழநாடு காவிரி வடகரை

மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.  10




  தலம் : இடைமருதூர் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.  10

 

  தலம் : இடைமருதூர் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

 குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.  10


  தலம் : வலிவலம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை



இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.  10



  தலம் : வீழிமிழலை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே.  10




  தலம் : சிவபுரம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.  10




  தலம் : சீர்காழி - 12-கழுமலம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
  தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
  கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
  போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
  காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.  10






  தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து நாடு : சோழநாடு காவிரி வடகரை

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே    
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே    
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே    
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.  11
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை    
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை    
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை    
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.  12



  தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து நாடு : சோழநாடு காவிரி வடகரை

ஐயுறு மமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறைமுதல் நான்கும்  8




  தலம் : சீர்காழி - 12-கழுமலம் நாடு : சோழநாடு காவிரி வடகரை

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
  மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத
  வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி
  யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
  மேல்படுக்குங் கழுமலமே.  10



    தலம் : ஐயாறு நாடு : சோழநாடு காவிரி வடகரை

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
  சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே
  யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்
  இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
  வந்தலைக்குந் திருவையாறே.  10




  தலம் : முதுகுன்றம் நாடு : நடுநாடு

மேனியில்சீ வரத்தாரும்விரிதருதட்
  டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
  உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
  முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
  தவம்புரியும் முதுகுன்றமே.  10




  தலம் : வீழிமிழலை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
  சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
  கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
  பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
  டும்மிழியும் மிழலையாமே.  10


  தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) நாடு : தொண்டைநாடு



குண்டுபட் டமணா யவரொடுங்
  கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை
  யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை
  ஒன்றி னாலவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங்
  காண விடர்கெடுமே.  10




  தலம் : பறியலூர் வீரட்டம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.  10


 தலம் : பராய்த்துறை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.  10




  தலம் : தருமபுரம் நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
  மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
  நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
  புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
  தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.  10



  தலம் : சீர்காழி - 10-காழி நாடு : சோழநாடு காவிரி வடகரை

மலையார் மாடம் நீடுயர்
  இஞ்சி மஞ்சாருங்
கலையார் மதியஞ் சேர்தரும்
  அந்தண் கலிக்காழித்
தலைவா சமணர் சாக்கியர்க்
  கென்றும் அறிவொண்ணா
நிலையா யென்னத் தொல்வினை
  யாய நில்லாவே.  10




  தலம் : கழுக்குன்றம் நாடு : தொண்டைநாடு

தேய நின்றான் திரிபுரங் கங்கை சடைமேலே
பாய நின்றான் பலர்புகழ்ந் தேத்த வுலகெல்லாம்
சாய நின்றான் வன்சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  10




திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த

தேவாரப் பதிகங்கள் - முதல் திருமுறை

பாடல்கள் (1 - 1469)

உள்ளுறை

1.1

திருப்பிரமபுரம்

(1-11)

தோடுடைய செவியன்

1.2

திருப்புகலூர்

(12-22)

குறிகலந்தஇசை

1.3

திருவலிதாயம்

(23-33)

பத்தரோடுபல

1.4

திருப்புகலியும் - திருவீழிமிழலையும்

(34-44)

மைம்மரு பூங்குழல்

1.5

கீழைத்திருக்காட்டுப்பள்ளி

(45-54)

செய்யரு கேபுனல்

1.6

திருமருகலும்- திருச்செங்காட்டங்குடியும்

(55-64)

அங்கமும் வேதமும்

1.7

திருநள்ளாறும் - திருஆலவாயும்

(65-75)

பாடக மெல்லடிப்

1.8

திருஆவூர்ப்பசுபதீச்சரம்

(76-86)

புண்ணியர் பூதியர்

1.9

திருவேணுபுரம்

(87-96)

வண்டார்குழ லரிவையொடும்

1.10

திருஅண்ணாமலை

(97-107)

உண்ணாமுலை உமையாளொடும்

1.11

திருவீழிமிழலை

(108-118)

சடையார்புன லுடையானொரு

1.12

திருமுதுகுன்றம்

(119-129)

மத்தாவரை நிறுவிக்கடல்

1.13

திருவியலூர்

(130 - 140)

குரவங்கமழ் நறுமென்குழல்

1.14

திருக்கொடுங்குன்றம்

(141-151)

வானிற்பொலி வெய்தும்மழை

1.15

திருநெய்த்தானம்

(152-162)

மையாடிய கண்டன்மலை

1.16

திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை

(163-173)

பாலுந்துறு திரளாயின

1.17

திருஇடும்பாவனம்

(174-184)

மனமார்தரு மடவாரொடு

1.18

திருநின்றியூர்

(185-194)

சூலம்படை சுண்ணப்பொடி

1.19

திருக்கழுமலம் - திருவிராகம்

(195-205)

பிறையணி படர்சடை

1.20

திருவீழிமிழலை - திருவிராகம்

(206-216)

தடநில வியமலை

1.21

திருச்சிவபுரம் - திருவிராகம்

(217-227)

புவம்வளி கனல்புனல்

1.22

திருமறைக்காடு - திருவிராகம்

(228-238)

சிலைதனை நடுவிடை

1.23

திருக்கோலக்கா

(239-249)

மடையில் வாளை

1.24

சீகாழி

(250-260)

பூவார் கொன்றைப்

1.25

திருச்செம்பொன்பள்ளி

(261-271)

மருவார் குழலி

1.26

திருப்புத்தூர்

(272-282)

வெங்கள் விம்மு

1.27

திருப்புன்கூர்

(283-293)

முந்தி நின்ற வினை

1.28

திருச்சோற்றுத்துறை

(294-304)

செப்ப நெஞ்சே

129

திருநறையூர்ச்சித்தீச்சரம்

(305-315)

ஊரு லாவு பலிகொண் டு

1.30

திருப்புகலி

(316-326)

விதியாய் விளைவாய்

1.31

திருக்குரங்கணின்முட்டம்

(327-337)

விழுநீர்மழு வாள்படை

1.32

திருவிடைமருதூர்

(338-348)

ஓடேகலன் உண்பதும்

1.33

திருஅன்பிலாலந்துறை

(349-359)

கணைநீடெரி மாலர

1.34

சீகாழி

(360-370)

அடலே றமருங்

1.35

திருவீழிமிழலை

(371-381)

அரையார் விரிகோ

1.36

திருஐயாறு

(382-392)

கலையார் மதியோ

1.37

திருப்பனையூர்

(393-403)

அரவச் சடைமேல்

1.38

திருமயிலாடுதுறை

(404-414)

கரவின் றிநன்மா

1.39

திருவேட்களம்

(415-425)

அந்தமும் ஆதியு மாகிய

1.40

திருவாழ்கொளிபுத்தூர்

(426-436)

பொடியுடை மார்பினர்

1.41

திருப்பாம்புரம்

(437-447)

சீரணி திகழ்திரு

1.42

திருப்பேணுபெருந்துறை

(448-458)

பைம்மா நாகம்

1.43

திருக்கற்குடி

(459-469)

வடந்திகழ் மென்முலை

1.44

திருப்பாச்சிலாச்சிராமம்

(470-480)

துணிவளர் திங்கள்

1.45

திருப்பழையனூர்-திருஆலங்காடு

(481-492)

துஞ்ச வருவாருந்

1.46

திருஅதிகைவீரட்டானம்

(493-503)

குண்டைக் குறட்பூதங்

1.47

திருச்சிரபுரம்

(504-514)

பல்லடைந்த வெண்டலையிற்

1.48

திருச்சேய்ஞலூர்

(515-525)

நூலடைந்த கொள்கையாலே

1.49

திருநள்ளாறு

(526-536)

போகமார்த்த பூண்முலையாள்

1.50

திருவலிவலம்

(537-547)

ஒல்லையாறி உள்ளமொன்றிக்

1.51

திருச்சோபுரம்

(548-558)

வெங்கண்ஆனை யீருரிவை

1.52

திருநெடுங்களம்

(559-569)

மறையுடையாய் தோலுடையாய்

1.53

திருமுதுகுன்றம்

(570-579)

தேவராயும் அசுரராயுஞ்

1.54

திருஓத்தூர்

(580-590)

பூத்தேர்ந் தாயன

1.55

திருமாற்பேறு

(591-600)

ஊறி யார்தரு

1.56

திருப்பாற்றுறை

(601-611)

காரார் கொன்றை

1.57

திருவேற்காடு

(612-622)

ஒள்ளி துள்ளக்

1.58

திருக்கரவீரம்

(623-633)

அரியும் நம்வினை

1.59

திருத்தூங்கானைமாடம்

(634-644)

ஒடுங்கும் பிணிபிறவி

1.60

திருத்தோணிபுரம்

(645-655)

வண்டரங்கப் புனற்கமல

1.61

திருச்செங்காட்டங்குடி

(656-666)

நறைகொண்ட மலர்தூவி

1.62

திருக்கோளிலி

(667 - 677)

நாளாய போகாமே

1.63

திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து

(678-689 )

எரியார்மழுவொன் றேந்தியங்கை

1.64

திருப்பூவணம்

(690-700)

அறையார்புனலு மாமலரும்

1.65

காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

(701-711)

அடையார்தம் புரங்கள்மூன்றும்

1.66

திருச்சண்பைநகர்

702-721)

பங்கமேறு மதிசேர்சடையார்

1.67

திருப்பழனம்

(722-732)

வேதமோதி வெண்ணூல்பூண்டு

1.68

திருக்கயிலாயம்

(733-742)

பொடிகொளுருவர் புலியினதளர்

1.69

திருஅண்ணாமலை

(743-753)

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்

1.70

திருஈங்கோய்மலை

(754-764)

வானத்துயர்தண் மதிதோய்சடைமேல்

1.71

திருநறையூர்ச்சித்தீச்சரம்

(765-775)

பிறைகொள்சடையர் புலியினுரியர்

1.72

திருக்குடந்தைக்காரோணம்

(776-786)

வாரார்கொங்கை மாதோர்பாக

1.73

திருக்கானூர்

(787-797)

வானார்சோதி மன்னுசென்னி

1.74

திருப்புறவம்

(798-808)

நறவநிறைவண் டறைதார்க்கொன்றை

1.75

திருவெங்குரு

(809-819)

காலைநன் மாமலர்

1.76

திருஇலம்பையங்கோட்டூர்

(820-830)

மலையினார் பருப்பதந்

1.77

திருஅச்சிறுபாக்கம்

(831-841)

பொன்றிரண் டன்ன புரிசடை

1.78

திருஇடைச்சுரம்

(842-852)

வரிவள ரவிரொளி

1.79

திருக்கழுமலம்

(853-863)

அயிலுறு படையினர்

1.80

கோயில்

(864-874)

கற்றாங் கெரியோம்பிக்

1.81

சீர்காழி

(875-881)

நல்லார் தீமேவுந்

1.82

திருவீழிமிழலை

(882-892)

இரும்பொன் மலைவில்லா

1.83

திருஅம்பர்மாகாளம்

(893-903)

அடையார் புரமூன்றும்

1.84

திருக்கடனாகைக்காரோணம்

(904-914)

புனையும் விரிகொன்றைக்

1.85

திருநல்லம்

(915-925)

கல்லால் நிழல்மேய

1.86

திருநல்லூர்

(926-936)

கொட்டும் பறைசீராற்

1.87

திருவடுகூர்

(937-947)

சுடுகூ ரெரிமாலை

1.88

திருஆப்பனூர்

(948-958)

முற்றுஞ் சடைமுடிமேன்

189

திருஎருக்கத்தம்புலியூர்

(959-968)

படையார் தருபூதப்

1.90

திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்

(969-980)

அரனை உள்குவீர்

1.91

திருஆரூர் - திருவிருக்குக்குறள்

(981-991)

சித்தம் தெளிவீர்காள்

1.92

திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்

(992-1002)

வாசி தீரவே

1.93

திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்

(1003-1013)

நின்று மலர்தூவி

1.94

திருஆலவாய் - திருவிருக்குக்குறள்

(1014-1024)

நீல மாமிடற்

1.95

திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்

(1025-1035)

தோடொர் காதினன்

1.96

திருஅன்னியூர் - திருவிருக்குக்குறள்

(1036-1046)

மன்னி யூரிறை, சென்னி யார்பிறை

1.97

திருப்புறவம்

(1047-1057)

எய்யாவென்றித் தானவரூர்மூன்

1.98

திருச்சிராப்பள்ளி

(1058-1068)

நன்றுடையானைத் தீயதிலானை

1.99

திருக்குற்றாலம்

(1069-1079)

வம்பார்குன்றம் நீடுயர்சாரல்

1.100

திருப்பரங்குன்றம்

(1080-1090)

நீடலர்சோதி வெண்பிறையோடு

1.101

திருக்கண்ணார்கோயில்

(1091-1101)

தண்ணார்திங்கட்

1.102

சீகாழி

(1102-1111)

உரவார்கலையின்

1.103

திருக்கழுக்குன்றம்

(1112-1121)

தோடுடையானொரு காதில்தூய

1.104

திருப்புகலி

(1122-1132)

ஆடல் அரவசைத்தான்

1.105

திருஆரூர்

(1133-1142)

பாடலன் நான்மறையன்

1.106

திருஊறல்

(1143-1151)

மாறில் அவுணரரணம்

1.107

திருக்கொடிமாடச்செங்குன்றூர்

(1152-1162)

வெந்தவெண் ணீறணிந்து

1.108

திருப்பாதாளீச்சரம்

(1163-1173)

மின்னியல் செஞ்சடைமேல்

1.109

திருச்சிரபுரம்

(1174-1184)

வாருறு வனமுலை

1.110

திருவிடைமருதூர்

(1185-1195)

மருந்தவன் வானவர்

1.111

திருக்கடைமுடி

(1196-1206)

அருத்தனை அறவனை

1.112

திருச்சிவபுரம்

(1207-1217)

இன்குர லிசைகெழும்

1.113

திருவல்லம்

(1218-1227)

எரித்தவன் முப்புரம்

1.114

திருமாற்பேறு

(1228-1237)

குருந்தவன் குருகவன்

1.115

திருஇராமனதீச்சரம்

(1238-1248)

சங்கொளிர் முன்கையர்

1.116

திருநீலகண்டம்

(1249-1258)

அவ்வினைக் கிவ்வினை

1.117

திருப்பிரமபுரம் - மொழிமாற்று

(1259-1270)

காட தணிகலங் காரர

1.118

திருப்பருப்பதம்

(1271-1281)

சுடுமணி யுமிழ்நாகஞ்

1.119

திருக்கள்ளில்

(1282-1292)

முள்ளின்மேல் முதுகூகை

1.120

திருவையாறு - திருவிராகம்

(1293-1303)

பணிந்தவர் அருவினை

1.121

திருவிடைமருதூர் - திருவிராகம்

(1304-1314)

நடைமரு திரிபுரம்

1.122

திருவிடைமருதூர் - திருவிராகம்

(1315-1325)

விரிதரு புலியுரி

1.123

திருவலிவலம் - திருவிராகம்

(1326-1336)

பூவியல் புரிகுழல்

1.124

திருவீழிமிழலை - திருவிராகம்

(1337-1347)

அலர்மகள் மலிதர

1.125

திருச்சிவபுரம் - திருவிராகம்

(1348-1358)

கலைமலி யகலல்குல்

1.126

திருக்கழுமலம் - திருத்தாளச்சதி

(1359-1369)

பந்தத்தால் வந்தெப்பால்

1.127

சீகாழி - திருஏகபாதம்

(1370-1381)

பிரம புரத்துறை

1.128

திருவெழுகூற்றிருக்கை

(1382)

ஓருரு வாயினை

1.129

திருக்கழுமலம்

(1383-1393)

சேவுயருந் திண்கொடியான்

1.130

திருவையாறு

(1394-1404)

புலனைந்தும் பொறிகலங்கி

1.131

திருமுதுகுன்றம்

(1405-1415)

மெய்த்தாறு சுவையும்

1.132

திருவீழிமிழலை

(1416-1426)

ஏரிசையும் வடவாலின்

1.133

திருவேகம்பம்

(1427-1436)

வெந்தவெண் பொடிப்பூசு

1.134

திருப்பறியலூர் - திருவீரட்டம்

(1437-1447)

கருத்தன் கடவுள்

1.135

திருப்பராய்த்துறை

(1448-1458)

நீறுசேர்வதொர்

1.136

திருத்தருமபுரம்

(1459-1469)

மாதர் மடப்பிடி



திருச்சிற்றம்பலம்



https://shaivam.org/panniru-thirumurai/campantar-tevaram-first-tirumurai-verses-1-1469-in-tamil-script-unicode-format